Cool

Cool

Thursday, November 14, 2019

வில்லங்கச் சான்றிதழ் எவ்வாறு பெறுவது?

வில்லங்கச் சான்றிதழ் எவ்வாறு பெறுவது?

ஒரு நிலத்தையோ வீட்டையோ வாங்குவதற்கு முன் அதில் சட்டச் சிக்கல் ஏதாவது உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வில்லங்கச் சான்றிதழ் அவசியம். அந்த நிலத்தையோ வீட்டையோ ஏற்கெனவே அதன் உரிமையாளர் அடமானம் வைத்திருந்தால், அதை அடமானமாகப் பெற்றவர் இதை உறுதிசெய்து கொள்ளும் வகையில் பதிவாளர் அலுவலகத்தில் இதைப் பதிவு செய்வார்.

இதனால் கடன் தொகையை முழுவதுமாகத் திருப்பிச் செலுத்திய பிறகுதான் இந்தப் பகுதியை நீக்கிவிட்டு அந்தச் சொத்தின் உரிமையாளரை அடமானத்திலிருந்து மீட்க முடியும். இப்படிச் செய்யாமல் அந்தச் சொத்தை விற்க முடியாது.

இந்த இடத்தில் அடமானத்தை வில்லங்கம் என்று குறிப்பிடுகிறோம். 

அதாவது அந்த வீட்டை விற்க முடியாமல் தடுக்கும் வில்லங்கம். ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கும்போது அதை விற்பதற்கான முழு உரிமையும், எந்தவிதச் சிக்கலுமின்றி, அதன் உரிமையாளருக்கு இருக்க வேண்டும். 

இல்லை என்றால் நாளடைவில் அந்தச் சொத்து உங்களிடமிருந்து பறிக்கப்படலாம் அல்லது பெருந்தொகையை நீங்கள் அளிக்க வேண்டி வரலாம். இவற்றைத் தவிர்க்கத்தான் வில்லங்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.

எத்தனை வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் தேவை என்பதை விண்ணப்பிக்கும்போது நாம் குறிப்பிட வேண்டும். 

அந்தக் காலக்கட்டத்தில் எந்த வில்லங்கமும் காணப்படவில்லை என்பதைத் தங்களிடமுள்ள ஆவணங்களைக் கொண்டு சரி பார்ப்பதன் மூலம் உறுதிசெய்து கொண்டபின் உங்களுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழை அளிப்பார்கள் (Nil Encumbrance Certificate). 

இப்படி அளித்தால் அந்தக் காலகட்டத்தில் அந்தச் சொத்து அடமானமாக வைக்கப்படவில்லை என்று பொருள் (அப்படி அடமானமாக வைக்கப்பட்டு மீட்கப்பட்டிருந்தால் இந்த விவரத்தை அடமானப் பத்திரத்திலேயே குறிப்பிடுவார்கள்).

இந்தச் சான்றிதழை ஆன்லைனிலும் பெறலாம். 

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை tnreginet.gov.in என்ற தளத்தில் சென்று அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை அளிப்பதன் மூலம் வில்லங்கச் சான்றிதழ் பெறலாம். 

இதற்கு உரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு காலகட்டத்துக்கான சான்றிதழ் கேட்கிறீர்களோ அதைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடும்.

சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று படிவம் 22 என்ற விண்ணப்பத்தை நிரப்பி அளிக்க வேண்டும். சொத்தை வாங்குபவர், விற்பவர் ஆகியோரின் பெயர்கள், சொத்து விவரங்கள் போன்றவற்றை நீங்கள் அளிக்க வேண்டியிருக்கும்.
பொதுவாக 15-லிருந்து 20 நாட்களில் இந்தச் சான்றிதழ் கிடைக்கும். 

ஆன்லைனில் விண்ணப்பித்தால் மூன்று நாட்களில் கிடைக்க வாய்ப்பு அதிகம். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்தாரரின் முகவரிச் சான்று, அந்தச் சொத்தின் பதிவு ஆவணம் போன்றவற்றின் பிரதிகளை அளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், எந்த அடமானம் அந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதோ அவற்றைத்தான் இந்தச் சான்றிதழ் வெளிப்படுத்தும். குறுகிய காலத்துக்கான அடமானம், உயில் போன்ற சில ஆவணங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது. எனவே, இவையெல்லாம் வில்லங்கச் சான்றிதழின் மூலம் வெளிப்படாது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

நன்றி:- ஹிந்து தமிழ்

காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுப்பது எப்படி?

காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுப்பது எப்படி?

🛡 *இனி வீட்டில் இருந்தே காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுக்கலாம்*

🔅மிகமிக எளிதான முறையில்....

🔅தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (Online FIR)சமீபத்தில் துவங்கியது. 

🔅இந்த புது சேவையின் மூலம் புகார் கொடுக்க விரும்பும் நபர்கள் காவல் நிலையம் சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்த்து,

🏡 வீட்டில் இருந்தப்படியே இணையத்தின் உதவியுடன் புகார் கொடுக்கலாம். இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது.

🔅 இந்த ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தவறாக பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

🔅இந்த சேவையின் மூலம் தமிழ்நாட்டில் உறைவிடம் கொண்டவர்கள் புகார் கொடுக்கலாம். தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
 
 
🔅உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்..

 
http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?1
 
🔅மேலேக் கொடுக்கப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு சென்றப் பின்
 
*District:* உங்கள் மாவட்டம் தேர்வு செய்யவும்(எ.கா: சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர்)
 
*Name:* புகார் கொடுக்க விரும்புவரின் பெயர் பதிவு செய்யவும்
 
*Date of Birth:* புகார் கொடுக்க விரும்புவரின் பிறந்த தேதி பதிவு செய்யவும்
 
*Address:* புகார் கொடுக்க விரும்புவரின் முகவரி பதிவு செய்யவும்
 
*Mobile Number:* புகார் கொடுக்க விரும்புவரின் அலைப்பேசி எண் பதிவு செய்யவும்
 
*Email ID:* புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்..

*Subject:* உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்
 
*Date of Occurrence:* நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்
 
*Place of occurrence:* நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்
 
*Description:* உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்
 
*Want to attach Documents* [Max. 4MB(PDF, PNG, JPEG) Files alowed]:உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.
 
*Security Code:* இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுக்காப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்
 
*Register:* அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான  Acknowledgement No. உங்களுக்கு வழங்கப்படும்...அந்த நம்பரை பயன்படுத்தி ஆன்லைனிலேயே நமது புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்....

🔰Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் Acknowledgement Numberஐ பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
🔅இது போன்ற தொழிநுட்ப முன்னேற்றங்கள் நமது நேரத்தையும், அலைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை அதிகளவில் குறைப்பதோடு குற்றங்களுக்கான தீர்வும் விரைவில் கிடைக்கும். எனவே இது போன்ற தொழில்நுட்பங்களை நல்ல விதங்களில் பயன்படுத்தி பயன் பெறுவோம்.

Saturday, June 29, 2019

TNPSC CERTIFICATES VERIFICATION

TNPSC  CERTIFICATES VERIFICATION

** நான் டிகிரி சர்டிபிகேட் நம்பர் தப்பா போட்டுட்டேன், என்ன ரிஜெக்ட் பண்ணிடுவாங்களா?

** நான் கம்ம்யூனிட்டி சர்டிபிகேட் டேட் தப்பா போட்டுட்டேன் என்ன ரிஜெக்ட் பண்ணிடுவாங்களா?

**அப்ளிகேஷன்ல என் நேம்-க்கு நடுவுல ஸ்பேஸ் இருக்கு, என் சர்டிபிகேட்ல ஸ்பேஸ் இல்ல, ஏதும் பிராப்ளம் வருமா?

** நான் எக்ஸாம்க்கு அப்ளை பண்றப்போ மேரேஜ் ஆகல, இப்போ மேரேஜ் ஆகிடுச்சு, ஏதும் பிராப்ளம் ஆகுமா?

தற்போது இப்படி கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கும் - இனிமே கேட்பதற்கு தயாராக இருக்கும் எல்லாருக்கும்.........

👇👇👇👇👇👇👇👇👇👇

சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும் முக்கிய 10 நிகழ்வுகள்:

1. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையைப் பயன்படுத்தி இருந்தால், (Except SC, ST and PH candidates)

2. நிரந்தரப் பதிவில் 10ம் வகுப்பு பதிவு எண்ணை (Reg. number) தவறாக கொடுத்து இருந்தால் (நன்றாக கவனிக்க: பதிவு எண், சான்றிதழ் எண் (Certificate number ) அல்ல)

குறிப்பு: நீங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களையும் சரியாக கொடுத்து இருந்தால் போதுமானது, இந்த தவறின் காரணமாக இது வரை யாரும் நிராகரிக்கப்பட வில்லை, அனால் TNPSC க்கு நிராகரிக்க உரிமை உண்டு என்பதனை நினைவில் கொள்ளவும்.

3. சாதி, மதம் மற்றும் சாதி உள் பிரிவு தொடர்பான தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க போதிய அவகாசம் கொடுத்தும் சமர்ப்பிக்க வில்லை என்றால்.

குறிப்பு: உங்கள் சாதிச் சான்றிதழில் உள்ள சான்றிதழை அளித்த அதிகாரி மற்றும் அவரின் மாவட்டமும், அலுவலக முத்திரையில் (OFFICE SEAL) உள்ள மாவட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் கோவை மாவட்டத்தில் சான்றிதழ் வாங்கி உள்ளீர்கள் என்றால், பின்னர் கோவையின் ஒரு பகுதி, திருப்பூர் மாவட்டம் என பிரிந்து இருக்கும். அப்போது, சான்றிதழில் கையொப்பம் இட்ட அதிகாரி திருப்பூர் என இருக்கும், ஆனால் அலுவலக முத்திரை மட்டும் கோவை என்றே பழைய முத்திரையை இட்டுக் கொண்டிருப்பார்கள். இதனைக் கவனித்து சரியாக முத்திரை வாங்க வேண்டும்.

குறிப்பு: இதற்காக ஒன்று அல்லது இரு வாரகாலம் அவகாசம் அளிப்பார்கள். போதிய அவகாசத்தில் தேவையான தகவல்கள் / சான்றிதழ்களை சமர்ப்பிக்க வில்லை என்றால் நிராகரிக்க உரிமை உண்டு.

4. சான்றிதழ் சரி பார்ப்பிற்கு வரவில்லை என்றால்.

5. தேவையான கல்வி மற்றும் தொழில் நுட்பத் தகுதியை தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே (Before notification) முடிக்காமல், அறிவிப்பு க்கு பின் முடித்து இருந்தால் (After notification).

7. கல்வித் தகுதியில் தவறான தகவல்கள் மற்றும் போலியான சான்றிதழ்களை அளிக்கும் பொழுது.

8. மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர், ஆதரவற்ற விதவை போன்ற சிறப்புப் பிரிவினராக விண்ணப்பத்தில் தெரிவித்து விட்டு பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பில் அதற்க்கான தகுந்த உறுதி படுத்தக் கூடிய சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருக்கும் பொழுது.

குறிப்பு: இதற்காக ஒன்று அல்லது இரு வாரகாலம் அவகாசம் அளிப்பார்கள். போதிய அவகாசத்தில் தேவையான தகவல்கள் / சான்றிதழ்களை சமர்ப்பிக்க வில்லை என்றால் நிராகரிக்க உரிமை உண்டு.

9. அரசு ஊழியராக இருப்பின், தடையின்மைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இருந்தால்.

10. தட்டச்சர் (TYPEWRITING), சுருக்கெழுத்து தட்டச்சர் (STENO TYPIST) போன்ற விபரங்களை விண்ணப்பத்தில் பதிந்து விட்டு அதற்குரிய தொழில் நுட்பச் சான்றிதழ் இல்லை என்றால்.

இது தவிர விண்ணப்பம், சான்றிதழில் உள்ள எழுத்துப் பிழை மற்றும் எண் பிழைகளுக்கு எல்லாம் கடிதம் எழுதிக் கேட்பார்கள்.

அதனால் பெரிய பாதிப்பு இல்லை.

அவர்களே திருத்திக் கொள்வார்கள்.

இவை தவிர வேறு எதனாலும், எந்த பிரச்சினையும் வராது.

குறிப்பு 1:
----------------

உங்களது நிரந்தர பதிவில் (ONE TIME REGISTRATION)

** உங்கள் பெயர்,
** பிறந்த தேதி
** தகப்பனார்-தாயார் பெயர்,
** சொந்த மாவட்டம்,
** பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம்,
**சாதி
** சாதி உட்பிரிவு
** சாதிச் சான்றிதழ் வழங்கிய அதிகாரி
**சாதிச்சான்றிதழ் வாங்கிய மாவட்டம்
** தாலுகா
** பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம்
** சான்றிதழ் எண்

போன்ற தணிக்கை (EDIT) செய்து மாற்ற முடியாத இடங்களில் மாற்றம் செய்ய,

apdtech2014@gmail.com

என்ற மின்னஞ்சல் (Mail) முகவரிக்கு உங்களது கோரிக்கையைத் தெரியப்படுத்த வேண்டும்.

அப்பொழுது நீங்கள் எந்த சான்றிதழ் குறித்து கோரிக்கை வைக்கிறீர்களோ அந்த சான்றிதழின் ஒளிக்கூறுப் பிரதியை (Scanned copy) அந்த மின் அஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் உங்களது நிரந்தர பதிவின் பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Password) இரண்டையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஒரு வார காலத்திற்குள் மாற்றிக் கொடுப்பார்கள்.

குறிப்பு 2:.
-------------

** கல்வித் தகுதி சான்றிதழ், தமிழ் வழிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றில் உங்கள் பெயரில் அல்லது தகப்பனார் பெயரில் ஏதேனும் பிழை இருப்பின் அல்லது சாதி மற்றும் சாதி உட் பிரிவில் ஏதேனும் தவறு இருப்பின் தற்போதே வேறு சான்றிதழ் புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

அவர்கள் கேட்கும் பட்சத்தில் உடனடியாகச் சமர்ப்பிக்கலாம். எதுவும் கேட்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். வாங்கிய சான்றிதழை அடுத்த தேர்விற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பழைய சான்றிதழுக்கும், புதிய சான்றிதழுக்கும், சான்றிதழ் எண் மற்றும் தேதி மாறுபடினும் பிரச்சினை ஏதும் இல்லை. அவர்களுக்குத் தேவை சரியான தகவல். அவ்வளவுதான்.

கவலையின்றி இருங்கள்.

வாழ்த்துக்கள்.

நன்றி.