Cool

Thursday, November 14, 2019
வில்லங்கச் சான்றிதழ் எவ்வாறு பெறுவது?
காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுப்பது எப்படி?
Saturday, June 29, 2019
TNPSC CERTIFICATES VERIFICATION
TNPSC CERTIFICATES VERIFICATION
** நான் டிகிரி சர்டிபிகேட் நம்பர் தப்பா போட்டுட்டேன், என்ன ரிஜெக்ட் பண்ணிடுவாங்களா?
** நான் கம்ம்யூனிட்டி சர்டிபிகேட் டேட் தப்பா போட்டுட்டேன் என்ன ரிஜெக்ட் பண்ணிடுவாங்களா?
**அப்ளிகேஷன்ல என் நேம்-க்கு நடுவுல ஸ்பேஸ் இருக்கு, என் சர்டிபிகேட்ல ஸ்பேஸ் இல்ல, ஏதும் பிராப்ளம் வருமா?
** நான் எக்ஸாம்க்கு அப்ளை பண்றப்போ மேரேஜ் ஆகல, இப்போ மேரேஜ் ஆகிடுச்சு, ஏதும் பிராப்ளம் ஆகுமா?
தற்போது இப்படி கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கும் - இனிமே கேட்பதற்கு தயாராக இருக்கும் எல்லாருக்கும்.........
👇👇👇👇👇👇👇👇👇👇
சான்றிதழ் சரிப்பார்ப்பில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணமாக இருக்கும் முக்கிய 10 நிகழ்வுகள்:
1. மூன்று முறைக்கு மேல் கட்டண சலுகையைப் பயன்படுத்தி இருந்தால், (Except SC, ST and PH candidates)
2. நிரந்தரப் பதிவில் 10ம் வகுப்பு பதிவு எண்ணை (Reg. number) தவறாக கொடுத்து இருந்தால் (நன்றாக கவனிக்க: பதிவு எண், சான்றிதழ் எண் (Certificate number ) அல்ல)
குறிப்பு: நீங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களையும் சரியாக கொடுத்து இருந்தால் போதுமானது, இந்த தவறின் காரணமாக இது வரை யாரும் நிராகரிக்கப்பட வில்லை, அனால் TNPSC க்கு நிராகரிக்க உரிமை உண்டு என்பதனை நினைவில் கொள்ளவும்.
3. சாதி, மதம் மற்றும் சாதி உள் பிரிவு தொடர்பான தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க போதிய அவகாசம் கொடுத்தும் சமர்ப்பிக்க வில்லை என்றால்.
குறிப்பு: உங்கள் சாதிச் சான்றிதழில் உள்ள சான்றிதழை அளித்த அதிகாரி மற்றும் அவரின் மாவட்டமும், அலுவலக முத்திரையில் (OFFICE SEAL) உள்ள மாவட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் கோவை மாவட்டத்தில் சான்றிதழ் வாங்கி உள்ளீர்கள் என்றால், பின்னர் கோவையின் ஒரு பகுதி, திருப்பூர் மாவட்டம் என பிரிந்து இருக்கும். அப்போது, சான்றிதழில் கையொப்பம் இட்ட அதிகாரி திருப்பூர் என இருக்கும், ஆனால் அலுவலக முத்திரை மட்டும் கோவை என்றே பழைய முத்திரையை இட்டுக் கொண்டிருப்பார்கள். இதனைக் கவனித்து சரியாக முத்திரை வாங்க வேண்டும்.
குறிப்பு: இதற்காக ஒன்று அல்லது இரு வாரகாலம் அவகாசம் அளிப்பார்கள். போதிய அவகாசத்தில் தேவையான தகவல்கள் / சான்றிதழ்களை சமர்ப்பிக்க வில்லை என்றால் நிராகரிக்க உரிமை உண்டு.
4. சான்றிதழ் சரி பார்ப்பிற்கு வரவில்லை என்றால்.
5. தேவையான கல்வி மற்றும் தொழில் நுட்பத் தகுதியை தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே (Before notification) முடிக்காமல், அறிவிப்பு க்கு பின் முடித்து இருந்தால் (After notification).
7. கல்வித் தகுதியில் தவறான தகவல்கள் மற்றும் போலியான சான்றிதழ்களை அளிக்கும் பொழுது.
8. மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர், ஆதரவற்ற விதவை போன்ற சிறப்புப் பிரிவினராக விண்ணப்பத்தில் தெரிவித்து விட்டு பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பில் அதற்க்கான தகுந்த உறுதி படுத்தக் கூடிய சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருக்கும் பொழுது.
குறிப்பு: இதற்காக ஒன்று அல்லது இரு வாரகாலம் அவகாசம் அளிப்பார்கள். போதிய அவகாசத்தில் தேவையான தகவல்கள் / சான்றிதழ்களை சமர்ப்பிக்க வில்லை என்றால் நிராகரிக்க உரிமை உண்டு.
9. அரசு ஊழியராக இருப்பின், தடையின்மைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அச் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இருந்தால்.
10. தட்டச்சர் (TYPEWRITING), சுருக்கெழுத்து தட்டச்சர் (STENO TYPIST) போன்ற விபரங்களை விண்ணப்பத்தில் பதிந்து விட்டு அதற்குரிய தொழில் நுட்பச் சான்றிதழ் இல்லை என்றால்.
இது தவிர விண்ணப்பம், சான்றிதழில் உள்ள எழுத்துப் பிழை மற்றும் எண் பிழைகளுக்கு எல்லாம் கடிதம் எழுதிக் கேட்பார்கள்.
அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
அவர்களே திருத்திக் கொள்வார்கள்.
இவை தவிர வேறு எதனாலும், எந்த பிரச்சினையும் வராது.
குறிப்பு 1:
----------------
உங்களது நிரந்தர பதிவில் (ONE TIME REGISTRATION)
** உங்கள் பெயர்,
** பிறந்த தேதி
** தகப்பனார்-தாயார் பெயர்,
** சொந்த மாவட்டம்,
** பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம்,
**சாதி
** சாதி உட்பிரிவு
** சாதிச் சான்றிதழ் வழங்கிய அதிகாரி
**சாதிச்சான்றிதழ் வாங்கிய மாவட்டம்
** தாலுகா
** பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம்
** சான்றிதழ் எண்
போன்ற தணிக்கை (EDIT) செய்து மாற்ற முடியாத இடங்களில் மாற்றம் செய்ய,
apdtech2014@gmail.com
என்ற மின்னஞ்சல் (Mail) முகவரிக்கு உங்களது கோரிக்கையைத் தெரியப்படுத்த வேண்டும்.
அப்பொழுது நீங்கள் எந்த சான்றிதழ் குறித்து கோரிக்கை வைக்கிறீர்களோ அந்த சான்றிதழின் ஒளிக்கூறுப் பிரதியை (Scanned copy) அந்த மின் அஞ்சலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் உங்களது நிரந்தர பதிவின் பயனாளர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Password) இரண்டையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒரு வார காலத்திற்குள் மாற்றிக் கொடுப்பார்கள்.
குறிப்பு 2:.
-------------
** கல்வித் தகுதி சான்றிதழ், தமிழ் வழிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றில் உங்கள் பெயரில் அல்லது தகப்பனார் பெயரில் ஏதேனும் பிழை இருப்பின் அல்லது சாதி மற்றும் சாதி உட் பிரிவில் ஏதேனும் தவறு இருப்பின் தற்போதே வேறு சான்றிதழ் புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் கேட்கும் பட்சத்தில் உடனடியாகச் சமர்ப்பிக்கலாம். எதுவும் கேட்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். வாங்கிய சான்றிதழை அடுத்த தேர்விற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏற்கனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பழைய சான்றிதழுக்கும், புதிய சான்றிதழுக்கும், சான்றிதழ் எண் மற்றும் தேதி மாறுபடினும் பிரச்சினை ஏதும் இல்லை. அவர்களுக்குத் தேவை சரியான தகவல். அவ்வளவுதான்.
கவலையின்றி இருங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.